க்யூட் வீடியோ... தங்கமே உன்னத்தான் பாடும் உயிர், உலக்!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ மற்றும் நயன்தாரா சிறுவயது வாழ்க்கை முதல், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்கள் அனைத்தும் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உட்பட பலவகையான விசயங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் நவம்பர் 18ம் தேதி வெளியானது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்ட அந்த வீடியோவில், இரு மகன்களும் நானும் ரவுடிதான் படத்திலுள்ள 'தங்கமே உன்னத்தான்' என்ற பாடலில் வரும் வரிகளை திரும்ப திரும்ப கூறுவதை காணலாம்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!