உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலி

 
உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் அக்டோபர் 18, 19, 20 ஆகிய 3 நாட்களில் பெய்யத கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. நைனிடால் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 224 வீடுகள் சேதமடைந்தன. மீட்புப்பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை விரைவுப்படை, மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டன.

உத்தரகாண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலி

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சிக்கி இதுவரை 72 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

உத்தராகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

From around the web