இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!
யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது நடைமுறைக்கு வந்தது.
டிஜிட்டல் இந்தியா மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காக மாறிவிட்டது. கிராமங்களின் பெட்டிக்கடை துவங்கி மாநகரங்களின் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு இன்று முதல் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம். முன்னதாக சராசரியாக நாளொன்றிற்கான அதிகபட்ச யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாகும். ஆனால் வங்கிகளுக்கு அவற்றின் சொந்த வரம்புகளை அமைக்க அதிகாரம் உள்ளது.
மூலதனச் சந்தைகள், வசூல், காப்பீடு உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகள் தினசரி ரூ. 2 லட்சம் வரம்பைக் கொண்டுள்ளன. தற்போது மூன்று வகை தேவைக்கு பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!