நவ.,1 முதல் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே!

 
நவ.,1 முதல் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே!

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களின் தேவையை பொறுத்து ரயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இயக்கப்படும் ரயில்கள் முன்பதிவு எப்போதோ முடிந்து விட்டது. பயணிகள் கூடுதல் மற்றும் முன்பதிவில்லா ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்தனர்.

நவ.,1 முதல் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே!


இதனை ஏற்று நவம்பர் 1ம் தேதி முதல் 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் படி பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயக்கலாம் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் நவம்பர் முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வழக்கமான ரயில்கள் சேவைகள் தொடங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவ.,1 முதல் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே!


இயக்கப்படும் ரயில் வழித்தடங்கள்:


ராமேசுவரம் – திருச்சி, திருச்சி – ராமேசுவரம்
எம்.ஜி.ஆர். சென்ட்ரல் – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- எம்.ஜி.ஆர்.
சென்ட்ரல், பாலக்காடு – திருச்சி, திருச்சி – பாலக்காடு நாகர்கோவில் – கோட்டயம், கோட்டயம் – நிலாம்பூர் சாலை, நிலாம்பூர் சாலை – கோட்டயம்


திருவனந்தபுரம் – சோரணூர், சோரணூர்-திருவனந்தபுரம்
கண்ணூர்-ஆலப்புழா, ஆலப்புழா-கண்ணூர்
திருவனந்தபுரம் – திருச்சி, திருச்சி-திருவனந்தபுரம்
எர்ணாகுளம்-கண்ணூர், கண்ணூர்-எர்ணாகுளம்

நவ.,1 முதல் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே!


கண்ணூர்-கோவை, கோவை-கண்ணூர்
திருவனந்தபுரம்-குருவாயூர், குருவாயூர்-திருவனந்தபுரம்
மங்களூரு-கோவை, கோவை-மங்களூரு
நாகர்கோவில்-கோவை, கோவை-நாகர்கோவில்

ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 10ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாமல் தவிப்பவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web