பதிவு செய்யாத இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும்... கலெக்டர் எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யாத குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியர் இளம்பகவத்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின் படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர்கள் மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் இணையத்தளத்தில் / அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக மேற்காணும் இணையத்தளம் அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!