அட... 50000 இருக்கைகள், 20000 விளக்குகள், 600 கழிப்பறைகள், 500 சிசிடிவி கேமிரா, 48 அரங்குகள்... மாநாட்டில் தொண்டர்களுக்கு அடிப்பொலி வசதிகள்!

 
தவெக
 

நாளை அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. நாளை தான் மாநாடு தொடங்க உள்ள நிலையில் ஒரு பக்கம் நேற்று முதலே தவெக நிர்வாகிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.  ஒரு புறம் மாநிலம் முழுவதும் இருந்து வரும் தவெக நிர்வாகிகள்,  பாதுகாப்புக்காகக் குவியும் காவல்துறை அதிகாரிகள் , பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டு தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  


மேலும், அந்த அணிகள் எந்த பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு அருகில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில், மாநாடு நடைபெறும் இடத்தில் தவெக நிர்வாகிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த பதிவு தான் இது.  
மாநாட்டு திடலில் பொதுமக்களுக்கு 50,000 இருக்கைகள்,  கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க 48 அரங்குகள்,  கூட்டம் அதிகரித்தால் வெளியே நின்று காணவும் ஏற்பாடுகளும், வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தவெக முதல் மாநாடு... இன்று மாலை கொடி கம்ப பூஜை... 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார் விஜய்!


ஒவ்வொரு அரங்கிலும் 2 குடிநீர் டேங்குகள்,  திடலை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஆங்காங்கே குடிநீர் டேங்குகள்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில்  தயார் நிலையில் 150 மருத்துவர்களும், 150 மருத்துவ பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேல் சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல 20 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைந்தால் குளுக்கோஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

விஜய்

தொண்டர்கள் தொப்பி அல்லது குடை எடுத்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திடலை சுற்றி 600 நடமாடும் கழிப்பறைகள் வசதிகள்,  3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் விளக்குகள்,  மாநாட்டுக்கு வருபவர்கள் நிகழ்ச்சிகளை எளிதாக கண்டுகளிக்க 72 எல்இடி திரைகள், மாநாட்டிற்காக மொத்தம் 20,000 மின் விளக்குகள்,  வாகனங்களை நிறுத்த 200 ஏக்கர் பரப்பில் 4 பார்க்கிங் மைதானங்களும், பார்க்கிங் முதல் மாநாடு வரை 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  
தகவல் தொடர்பு எளிதாக கிடைப்பதற்கு தற்காலிகமாக  ஒரு மொபைல் டவரும் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் வழக்கமான பாதுகாப்போடு தனியார் தன்னார்வலர்கள் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். திடலுக்குள் உணவு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு அருந்தி விட்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web