மாணவிகளுக்கு 2 நாள் மாதவிடாய் விடுமுறை.. அசத்திய அரசு.. குஷியில் பெண்கள்!
கேரளா பல்வேறு முக்கிய திட்டங்களில் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கேரள உயர் கல்வித்துறை கடந்த ஆண்டு மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை அறிவித்தது. உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல், கேரளாவில் பாலின சமத்துவ பள்ளி சீருடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று, ஐ.டி.ஐ., (தொழில் பயிற்சி நிறுவனங்கள் - ஐ.டி.ஐ.) மாணவிகளுக்கு மாதந்தோறும் 2 நாள் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாரம்பரிய உழைப்பு அதிகம் உள்ள வேலைகளிலும், மாணவிகள் அதிகளவில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், பல திறன் பயிற்சி திட்டங்களில் உடல் உழைப்பு தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இது மிகவும் உடல் ரீதியாக தேவைப்படும் பயிற்சி தொழில்களை உள்ளடக்கியது. இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, பெண் பயிற்சியாளர்களுக்கு (மாணவர்களுக்கு) ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று அவர் கூறினார்.
கேரளா முழுவதும் நூற்றுக்கணக்கான ஐடிஐக்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சி, பயிற்சி வகுப்புகள் மற்றும் பிற கல்வி சாரா இணை பாடத்திட்டங்களில் பங்கேற்கலாம் என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அரசின் இந்த முன்னோடி முயற்சிக்கு பெண்களும், கல்வியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!