பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த ரயில்வே போலீசார், சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
சங்கரன்கோவிலில் பாம்பகோவில் சந்தை ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட நிலையில், சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்த போது , கடையநல்லூர் - பாம்பகோவில் சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதியது. இதில் ரயிலின் இன்ஜின் முன் பக்க தகடு சேதமடைந்தது.
இது குறித்து லோகோ பைலட் தகவல் தெரிவித்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தில் கல் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் அதே பகுதியில் இயங்கி வரும் கல் குவாரி ஒன்றில் பணியாற்றி வரும், சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய இருவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!