2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. தலைமைக் காவலர் உட்பட 4பேர் பரிதாப பலி!

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த பிரபாகரன் (57), இன்று காலை விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு தனது மனைவி ஏஞ்சலின் உறவினர் மகள்கள் சுஷிலா பிரசன்னா மற்றும் சைன் பிரிசி ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். மதகடிப்பு மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது கார் மோதியதில், எதிர் திசையில் இருந்து வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் தலைமைக் காவலர் பிரபாகரன் மற்றும் ஓட்டுநர் சந்திரன் ஆகியோர் இறந்தனர். இருவரின் உடல்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மற்றொரு காரில் இறந்த கதிரவன் மற்றும் முனியன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!