புதுமனைவி சித்ரவதை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்... திணறிய போலீசார்!

 
சித்ரவதை
திருமணமான இளம்பெண் கணவர் சித்ரவதை செய்வதாக கூறிய வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது போலீசாரை திணற செய்துள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருமணமான இளம்ஜோடி குடும்ப பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து மல்லுக்கு நின்றனர். 

இந்த வழக்கில் தனது கணவர் சேர்ந்து குளிப்பதற்கு சம்மதிக்காததால் சித்ரவதைச் செய்வதாகவும், அவர் செய்கிற சித்ரவதைகளை வெளியே சொல்ல முடியாது என்றும் இளம்பெண் போலீசில் புகாரளித்தார். அதன் பின்னர் திடீர் திருப்பமாக தனது கணவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட புகாரை திரும்பப் பெற்றார். 

தற்போது புகாரைத் திரும்ப பெற்ற ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் நேற்று காயங்களுடன் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகாரளித்துள்ளது அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளது. 

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி

தனது கணவரிடம் இருந்து தான் தொடர்ந்து  சித்திரவதை அனுபவித்து வருவதாக புகாரளித்தார்.  
முதல் புகாரில், நீமா எனும் இளம்பெண் தனது கணவர் ராகுல் குடிபோதையில் மொபைல் போன் சார்ஜரைப் பயன்படுத்தி தன்னுடைய கழுத்தை நெரித்ததாகக் கூறியிருந்தார். மேலும் வரதட்சணையாக அதிக பணம் மற்றும் கார் கேட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

சித்திரவதையின் சமீபத்திய அளவு அதிகரித்ததாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் சமைத்த மீன் குழம்பில் புளி சரியான விகிதாச்சாரத்தில் கலக்கவில்லை என்று கூறி ராகுல் தன்னைத் தடியால் தாக்கியதாகவும் அடுத்த நாளும் சித்திரவதை தொடர்ந்ததாக நீமா கூறினார்.

நீமாவின் இடது கண் மற்றும் உதடுகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தபடியிருந்தது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 

புதுமனைவி சித்ரவதை

போலீசார் நீமாவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். போலீசாரிடம் தனது கணவரிடம் இருந்து தப்பித்து எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல உதவுமாறு நீமா வேண்டுகோள் வைத்திருந்தார். மீண்டும் தனது கணவர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், தான் புகார் கொடுத்து நகரத் தயாராக இல்லை என்றும், தன்னை கணவரிடம் இருந்து காப்பாற்றி, பெற்றோர் வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தால் போதும் என்றும் கதறியழுதார். 

இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்த நீமாவின் தந்தை, போலீசில் புகார் அளித்த பின்னரே தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதிப்படுத்தி புகாரை பதிவு செய்ய வைத்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web