தவெக மாநாட்டு பேனர்களை அகற்ற திடீர் உத்தரவு.. .போலீசார் கெடுபிடி!

 
தவெக

 நாளை மறுநாள் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவெக மாநாடு  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில்  நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள்  50,000 இருக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், சேர, சோழ, பாண்டியர், அப்துல்கலாம் வரை  தேசிய தலைவர்களின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

தவெக

இவர்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின்   கட் அவுட்டும் பிரமாண்டமாக  வைக்கப்பட்டுள்ளது.  மாநாட்டு பணிகள் ஒருபுறம் நடைபெற்று இருந்தாலும் மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும் பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முறைகளில் மும்மூரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தவெக

 தவெக மாநாட்டு திடலில்  வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கார்க் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக பேனர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web