’ செயல்மொழி தான் அரசியலுக்கான தாய்மொழி’ ... தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை !

 
விஜய்

 தவெகவின் முதல் அரசியல் மாநாடு  அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி  வி.சாலை கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  இந்த விழாவில் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.  மாநாடு நடைபெற இன்னும், சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,  மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில்  கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் தவெக மாநாட்டை வீட்டிலிருந்தே பார்க்குமாறு அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ”அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி”  இதன் மூலம், அரசியல் களத்தில் அதிகம் பேசாமல் தாங்கள் செய்யும் நல்ல வேலை தங்களுடைய செயல்கள் மூலம் தான் தெரியும் என அவர் கூறியுள்ளார்.  நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும்.

விஜய்

அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனவும் விஜய் கூறியுள்ளார்.  
அதாவது, விஜய் சினிமாவில் நடிகராக இருந்த போது ரசிகர்கள் அவரை கொண்டாடச் சந்தோஷமாகப் பல விஷயங்கள் செய்தது சில சமயங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போது விஜய் அரசியல் தலைவரான நிலையில்  ரசிகர்கள் தொண்டர்களாக மாறியுள்ளனர்.  அந்த பொறுப்புணர்வை மனதில் வைத்துக் கொண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காக்க வேண்டும்”  என விஜய் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web