"மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்" பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!
தேர்தல் சமயங்களில் சுப்பிரமணியன் சுவாமி பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே பகீர் கிளப்புபவை. மோடி இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியவர் இப்போது, பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
The Chinese are nibbling away at will Indian territory from Arunachal to Ladakh. All that Modi is doing is showing is his Laal Aankh to “koi aaya nahin aur hum gaye nahin”. Waiter in suit boot is impotently squealing. He should be re-posted as Acting Ambassador in Beijing.
— Subramanian Swamy (@Swamy39) April 3, 2024
பல ஆண்டுகளாக சீனா அருணாச்சல பிரதேசத்தை, சொந்தம் கொண்டாடி இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள் ஒரு ஏரி மற்றும் ஒரு மலைப்பகுதிக்கு புதிய பெயர்களை அதிகாரப்பூர்வமாக சீனா அறிவித்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடனான இந்தியாவின் வணிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசம் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி அமைதி காத்து வருவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
அருணாச்சலில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை. நாங்களும் போகமாட்டோம் என மோடி கூறி வருகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!