நிம்மதி கிடைக்குமா நிதீஸ்குமாருக்கு? பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு !
கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம்,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆகியவற்றுடன் மகா கூட்டணியில் இணைந்தது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ராஷ்ட்ரீய தின் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன், மகாகூட்டணி டமால் ஆனது அங்கிருந்து வெளியேறிய நிதிஷ் குமார், பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியில் மீண்டும் இணைந்தார். பாஜகவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்தார். முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 28ம் தேதி பதவியேற்றார். சட்டசபையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க, நிதிஷ் குமாரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், பீகார் சட்டசபையில், நிதிஷ் குமார் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மேற் கொள்கிறார். பீகார் சட்டசபையின் மொத்த பலம் 243. இதில் தேஜ கூட்டணிக்கு 128 உறுப்பினர்கள் உள்ளனர். மகா கூட்டணிக்கு 114 உறுப்பினர்கள் உள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெறுவார் என, எதிர்பார்க்கப்பட்டாலும், கடைசி நேரத்தில் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு சில சட்டசபை உறுப்பினர்கள் தேஜஸ்வி யாதவ் பண்ணை வீட்டில் முகாமிட்டுள்ளதால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க