நடிகர் சூர்யா மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 48. சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொண்டு ஓய்வில் இருந்து வந்தார். கடந்த 2, 3 நாட்களாகவே உடல் நல குறைவு காரணமாக மிகக் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மாரடைப்பால் மரணம் அடைந்த மனோஜின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் மனோஜ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!