மீண்டும் அத்துமீறல்.. தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையினர் அடாவடி!

 
தமிழக  மீனவர்கள்  வேதனை

தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ​​எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அதிகாலை கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவர்களை கொதிப்படைய செய்துள்ளது. மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு  முதல்வர் மு.க ஸ்டாலினும் கடிதம் எழுதி வருகிறார்.

இலங்கை மீனவர்கள்

அதுமட்டுமின்றி, கச்சத்தீவை மீட்கவும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஆயுதங்களால் தாக்குதல், வலைகள், படகுகளை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் மத்தியில் பாதுகாப்பின்மை அச்சம் நீடிக்கிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web