அட்ராசிட்டி செய்த திருநங்கையை அடித்தே கொன்ற சக திருநங்கைகள்.. ஆட்டோ டிரைவர் உட்பட ஆறு பேர் கைது!

 
சங்கவி கொலை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் அருகாமையில் உள்ள காப்பு காட்டில், நேற்று மதியம் திருநங்கை ஒருவர்,  உடலில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் விரைந்து வந்த, காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த திருநங்கையின் பெயர் சங்கவி என்றும், அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் எனவும், அவர் வீட்டை விட்டு வெளியேறி சில ஆண்டுகள் ஆகிவிட்டது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. சம்பந்தப்பட்ட திருநங்கை சங்கவி என்பவர், விருத்தாச்சலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், நாள்தோறும் குடித்துவிட்டு, அட்ராசிட்டியில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை விருத்தாச்சலம் மார்க்கெட் கமிட்டிக்கு எதிரே உள்ள செரிப் மஃபூல் என்ற தனது நண்பர் வீட்டிற்கு சென்று, உங்களது அறையில் நான் தங்கிக் கொள்கிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அவர் மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து செரிப் என்பவர், பூக்கடை சேகர் என்பவருக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்ததின் பேரில், பூக்கடை சேகர் மற்றும் அவருடன் நிரோஷா, மாயா, மரிக்கொழுந்து, சிவபெருமாள் ஆகிய நான்கு திருநங்கைகளும் சம்பந்தப்பட்ட செரிப் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது  திருநங்கை சங்கவிக்கும், சக திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அனைவரும் சேர்ந்து திருநங்கையான சங்கவியை அடித்தே கொன்றுள்ளனர். பின்னர் ஆட்டோ டிரைவரான கோபாலகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளனர்.

ஆட்டோவில் கருவேப்பிலங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோவை நிறுத்த சொல்லி, போர்வையில் சுற்றப்பட்டிருந்த திருநங்கையின் உடலை, சாலை ஓரத்தில் இருந்த காப்பு காட்டில் கொண்டு போய் தூக்கிப்போட்டுவிட்டு, மீண்டும் ஆட்டோவில் வெளியேறி அங்கிருந்து தப்பித்து ஓடிள்ளனர். இதைப் பற்றி விசாரணை செய்த காவல்துறையினர், குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்த ஆட்டோ டிரைவர் உட்பட ஆறு பேரையும் கைது செய்து, வழக்குப்பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான பூக்கடை சேகர்  தலைமறைவாகிவிட்டதால், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web