பாம்பன் பாலத்தில் பாதிப்பு! செப்.`14 வரையில் ராமேசுவரத்துக்கு அனைத்து ரயில்களும் ரத்து!

 
பாம்பன் பாலத்தில் பாதிப்பு! செப்.`14 வரையில் ராமேசுவரத்துக்கு அனைத்து ரயில்களும் ரத்து!


தமிழகத்தோடு ராமேசுவரத்தை இணைப்பதில் பாம்பன் ரயில் பாலத்தின் பங்கு மிக முக்கியமாக இருந்து வருகிறது. இந்த பாலம் கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக ரயில்கள் செல்லும்முன் ஏதேனும் பாதிப்புகள் மற்றும் அதிர்வுகள் உள்ளதா என்பதை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாம்பன் பாலத்தில் பாதிப்பு! செப்.`14 வரையில் ராமேசுவரத்துக்கு அனைத்து ரயில்களும் ரத்து!


ஜூன் 28ல் சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் இந்தப் பாலம் வழியாக வரும்போது சென்சார் கருவி ஒன்றில் இருந்து சத்தம் வந்ததுடன் லேசான அதிர்வும் ஏற்பட்டதால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐ.ஐ.டி. குழுவினரும் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் ஜூலை 14 வரை பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாம்பன் பாலத்தில் பாதிப்பு! செப்.`14 வரையில் ராமேசுவரத்துக்கு அனைத்து ரயில்களும் ரத்து!


இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட இருப்பதால் செப்டம்பர் 14வரையிலும் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்தே புறப்பட்டு செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூக்குப்பாலத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்ன வகையான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன என்பது குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படவில்லை. கடலில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாலம் அமைக்கப்படுவதால் பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது 105 ஆண்டுகளை கடந்து விட்டதால் தூக்கு பாலம் அதன் உறுதி தன்மையை இழந்து விட்டதா என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web