நான்கு மாத கர்ப்பம்... ரயில் மோதி காதல் ஜோடி பலியான சோகம்!

 
காதல் ஜோடி
 


நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், தங்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், கேரளத்தில் இருந்து வேலைத் தேடி சென்னைக்கு வந்த காதல் ஜோடி, பொத்தேரி அருகே ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வருபவர்  ஐஸ்வர்யா (28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், ஐஸ்வர்யா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

ரயில் தண்டவாளம்

இந்நிலையில், இருவீட்டு பெற்றோர்களும் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில், இருவரும் கேரளத்தில் இருந்து வேலைத் தேடி சென்னை புறப்பட்டு வந்துள்ளனர்.சென்னையில் நண்பர் ஒருவர் உதவியுடன் வேலைத் தேடி வந்த இவர்கள், நேற்றிரவு, 8:30 மணியளவில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கும் பொத்தேரி நிலையத்திற்கும் இடையே பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்த  மின்சார ரயில் இவர்கள் மீது மோதியது. 

ஆம்புலன்ஸ்
இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஷரீப், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஐஸ்வர்யாவை போலீசார் விரைந்து சென்று மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ஐஸ்வர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இந்த சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web