சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்... இன்று மாமல்லபுரத்தில் அனுமதி இலவசம்!

இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைமுன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலா தளத்தை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை போற்றும் வகையிலும், பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி இன்று சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலா தளத்தை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை இன்று கட்டணம் இன்றி பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி வெண்ணெய் உருட்டு பாறை, அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், புலிகுகை இவைகளை கட்டணமில்லாமல் சுற்றிப்பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!