சூடான பருப்பை ஊற்றி இளம்பெண் பாலியல் சித்ரவதை... தொடரும் கொடூரங்கள்... !

 
பருப்பு

இந்தியாவில் சமீபகாலமாக வடமாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பணிக்கு செல்லும் இடங்களில் பாதுகாப்பு சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகே பணியில் சேர வேண்டும் என பெண்கள் விழிப்புணர்வுபெற வேண்டும். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இளம்பெண்   ஒருவர் மீது பணிக்கு சென்ற இடத்தில் பருப்பை ஊற்றி பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இவர்   தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள ராஜு பூங்காவில்   வாடகை வீட்டில் பராஸுடன் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்தார். ஜனவரி 30ம்தேதி போலீசாருக்கு இளம்பெண் ஒருவரை அவரது கணவர்  தாக்குவதாக  புகார்  அளிக்கப்பட்டது.

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை பரிசோதித்ததில்  சிறுமியின் உடலில் 20 இடங்களில் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   அவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த இளம்பெண்  திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தினார்.  இது குறித்து அவர்  சமூகவலைதளங்கள் மூலம் பராசுடன் பழக்கம் ஏற்பட்டு  தொலைபேசி மூலம் நட்பாக மாறியது. 4 மாதங்கள் கடந்த நிலையில்  வீட்டு பணிப்பெண்ணாக பெங்களூருக்கு செல்ல இருப்பதாக கூறினார்.  டெல்லியில் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறியதில் அவர்  பராசுடன் தங்கி விட்டார். ஆனால் வாடகை வீட்டில் தங்கியிருந்த போது பராஸ் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

டெல்லி போலீஸ்

 குறிப்பாக அவர் மீது சூடான பருப்பை ஊற்றி சித்ரவதை செய்தார். இதனால் உடலில் தீக்காயங்கள் கொப்புளங்கள் ஏற்பட்டு வலியால் துடித்தபோதும் தொடர்ந்து அவளைபாலியல்துன்புறுத்தலில் ஈடுபடுத்தினார்.  இதில் பராஸ்   உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர்   சமையல்காரராக பணிபுரிந்துவந்தார். புகாரின் அடிப்படையில் இவரை போலீசார்   பிப்ரவரி 2 ம் தேதி கைது செய்தனர்   . பணிதேடிஅலையும் பெண்கள் அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் போலீசார் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web