சென்னையில் இன்று இரவு ட்ரெய்லர் மட்டும் தான், பிறகு தான் ஆட்டமே... சென்னைக்கு கனமழை... வெதர்மேன் அப்டேட்!
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று நவம்பர் 11ம் தேதி காலை 8. 30 மணி நிலவரப்படி அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனையடுத்து அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சென்னையில் காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில், இப்பொது திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “சென்னையில் இன்று சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகிறது. இது வெறும் ட்ரெயிலர் தான். இன்று இரவும், நாளை காலையும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவான பிறகு தான் ஆட்டமே ஆரம்பிக்கும்” என பதிவிட்டுள்ளார். அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 4 மாவட்டங்களில் இன்று முதல் 15ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!