இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

நாளை ,புரட்டாசி 25, அக்டோபர் 11, 2021 , திங்கட்கிழமை
திதி: சஷ்டி
நட்சத்திரம்: கேட்டை
யோகம்: சித்தயோகம்.
சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்:
காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
எம கண்டம்:
காலை 10.30மணி முதல் 12.00 மணி வரை
குளிகன்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

சுப ஹோரைகள்:


மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை


நாளைய ராசிபலன்

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

மேஷம்

இன்று சந்திராஷ்டம். இதனால் சிறு மனக்குழப்பங்கள் உருவாகலாம். உடல் நலனில் அக்கறை அவசியம். பேச்சில் நிதானம் தேவை. குழப்பங்கள் பிற்பகலுக்கு பிறகு சீராகும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.

ரிஷபம்

இன்று மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் காலதாமதம் உருவாகலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் வீண் வாக்குவாறுதிகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

மிதுனம்

இன்று யோகமான நாள் . திடீர் பணவரவு நிச்சயம். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத லாபம் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று உற்சாகமான நாள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். சேமிப்புக்கள் உயரும் நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

சிம்மம்

இன்று அலைச்சல் அதிகரிக்கும் நாள். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணவிரயத்தை தடுக்கலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம்.

கன்னி

இன்று அதிர்ஷ்டமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி அடையலாம். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கூடும். சுபச்செய்திகள் வந்து சேரும். பொன், பொருள், வாகனச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல் லாபகரமானதாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும் நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

துலாம்

இன்று ஆனந்தமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். பூர்வீக சொத்துக்களால் பலன் உண்டு.

விருச்சிகம்

இன்று செலவினங்கள் அதிகரிக்கும் நாள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. சிக்கனத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முயற்சிக்கு நல்ல பலன் காணலாம். அலைச்சல்கள் கூடும் என்றாலும் அதற்கேற்ற பலன் நிச்சயம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

தனுசு

இன்று சுமாரான நாள். புதிய முயற்சிகளில் கடும் உழைப்பு தேவை. பொறுமையும் நிதானமும் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.

மகரம்

இன்று சுபமான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். காரியத் தடை அகலும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம் தான்!

கும்பம்

இன்று தனவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். சேமிப்புக்கள் உயரும்.உடல் ஆரோக்கியம் சிறக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

மீனம்

இன்று சிரமமான நாள். காரியத் தடையும், தாமதங்களும் உருவாகும். தொழிலில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் நலனில் அக்கறை தேவை. நண்பர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும்.

From around the web