இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... புதிய உச்சம் தொட்ட தக்காளி!

 
தக்காளி


 
தமிழகத்தில் தொடர் மழை விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயம் மற்றும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுவருகிறது . சாதாரணமாகவே புரட்டாசி தொடங்கி மார்கழி முடியும் வரை காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்வது வழக்கமே. தற்போது மேலும் உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி

கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்கப்பட்டது.  வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.55க்கு விற்கப்பட்ட தக்காளி சில்லறை கடைகளில் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனையான தக்காளி ஒரே வாரத்தில் ரூ.30 அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தக்காளி சின்ன வெங்காயம்

தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்து விட்டனர். தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம் என்கின்றனர் வியாபாரிகள்   

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web