தமிழகத்தில் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
சுங்கச்சாவடி

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேவையில்லாத இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக கட்டணங்களை வசூலிப்பதாகவும் ஏற்கெனவே சுங்கசாவடி கட்டணத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மேலும் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை பரிசீலிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும்  மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.

சுங்கச்சாவடி

இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஜுன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. 5 சதவீதம் வரை அப்போது கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சுங்கச்சாவடி

இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web