இன்று கப்பலோட்டிய தமிழர்... செக்கிழுத்த செம்மல்.. வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் | தூத்துக்குடியில் கோலாகலம்

 
குற்றாலம் வ.உ.சி

இன்று விஜய் நடித்த கோட் படம் வெளியாகும் நிலையில், அந்த படத்தின் மீது காட்டும் ஈடுபாட்டில் ஒரு சதவீதத்தையாவது நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் மீது காட்டுங்க. ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழர்களுக்காக கப்பல் விட்ட பெருந்தகையனார், சிறையில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் பிறந்தநாள்.

வஉசி

ஆம்.. இன்று கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், விடுதலைப் போராட்டத் தியாகி, தமிழறிஞர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த நாள் விழா இன்று செப்டம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்

விழாவிற்கு வ.உ.சி. பிறந்தநாள் விழாக்குழு தலைவர் பொன் வெங்கடேஷ் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் பே. சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். பியர்ல் ஷிப்பிங் ஏஜென்சீஸ் எட்வின் சாமுவேல் முன்னிலை வகிக்கிறார். வ.உ.சி. கல்விக்கழகம் செயலர், ஏபிசிவி சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை ஆற்றுகிறார்

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web