இன்று நடைபெற இருந்த ஆண்டு தேர்வு ஒத்திவைப்பு... கலெக்டர் அறிவிப்பு!

இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில், தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மாவட்டங்களுக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 7ம் தேதி வழக்கம் போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். இதற்கு மாறாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆண்டு தேர்வு நாளை ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!