Connect with us

ஆன்மிகம்

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

Published

on

நமது முன்னோர்கள் ஒவ்வொரு செயலையும், விஞ்ஞான பூர்வமாகவே வகுத்து வைத்துள்ளனர். வெறும் மூட நம்பிக்கை என்று நாம் அதனைப் புறந்தள்ளி விடுகிறோம். ஒவ்வொரு நாள், வார, மாத வருட வழிபாட்டிற்கு பின்னால், இறை நம்பிக்கை மட்டுமே காரணமாக இல்லாமல் விஞ்ஞானத்தையும், அறிவியல் பூர்வமான பலன்களையும் சேர்த்தே வகுத்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வருகிற பெளர்ணமியன்றும் விசேஷமானது தான். நிலவு வானத்தில் பரிபூர்ணமாய் ஜொலிக்கப் போகும் அந்த இனிய நாளில் வழிபட்டால், ஒவ்வொரு விதமான பலன்கள் நம் வாழ்க்கை கிட்டும். அது போல, புரட்டாசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமியன்று அந்த சந்திரனைப் போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் அன்றைய தினம் விளங்குவாள். அதனால் தான் அம்பாளுக்கு சந்திர மண்டல மத்யகா என்ற பெயரும் உண்டு.

இந்த பெளர்ணமியன்று விரதமிருந்து அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து விட்டு, நெய் விளக்கேற்றுவது அத்தனை விசேஷம். ஆலயங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடலாம்.

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே, அசைவ உணவுகளுக்கு தடை சொல்லி விடுகிறோம். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது தெரியும். பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தை, மகாளய அமாவாசை என்று முன்னோர்களுக்கு பித்ரு காரியங்கள் செய்யும் மிக முக்கிய நாளாகப் பார்க்கிறோம். அது எத்தனை முக்க்கியமோ அதைப் போலவே இந்த மாதத்தின் பெளர்ணமியும் மிக அற்புதமான விரத நாள்.

புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால், உங்களை அறியாமல் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் கூட உங்கள் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்பது தான் இந்த நாளின் சிறப்பு. அதோடு, இந்த பிறவியிலும் உங்களுக்குத் தேவையான செல்வங்கள் அனைத்தும் எஞ்சிய காலங்களுக்கு உங்களை வந்து சேரும். ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை தேவர்களுக்கு இரவு காலம். அதனால் தான் இந்த காலத்தை நாம் தட்சிணாயண காலம் என்கிறோம்.

புரட்டாசி மாதம் தேவர்களின் நடுநிசியாகும். இன்றைய தினம் அம்பிகை பிரகாசமாக ஜொலிப்பாள். தேவர்கள், அம்பிகையின் திருநாமத்தை உச்சரித்தபடியே தியானமும், தவமுமாக இருந்து அவளின் பூர்ண அருளைப் பெறுவார்கள். இந்த நாளில் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் விட்டு விலகியோடி, லட்சுமி கடாட்சம் கிட்டும்.

உலகம்48 mins ago

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

செய்திகள்1 hour ago

உஷார்!! நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு முழு விவரம்!

கன்னியாகுமரி6 hours ago

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! கலெக்டர் அதிரடி!

செய்திகள்6 hours ago

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

செய்திகள்6 hours ago

அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

செய்திகள்6 hours ago

அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்! தமிழக அரசு அரசாணை!

செய்திகள்6 hours ago

14 நாட்கள் தற்செயல் விடுப்பு! அரசு ஊழியர்கள் உற்சாகம்!

அரசியல்7 hours ago

களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!

குற்றம்7 hours ago

டிபன் பாக்ஸில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு! மாணவர்கள் படுகாயம்!!

இந்தியா8 hours ago

100 படுக்கை வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனைகள்! அதிரடி அறிவிப்பு!

செய்திகள்5 days ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

கள்ளக்குறிச்சி3 weeks ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

கன்னியாகுமரி1 week ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

செய்திகள்3 weeks ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சிவகங்கை1 day ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

சினிமா3 weeks ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்4 days ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

செய்திகள்24 hours ago

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இந்தியா2 weeks ago

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

Trending