இன்று 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! உற்சாத்துடன் பள்ளி செல்ல தயாராகிய மாணவர்கள்!

இன்று 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! உற்சாத்துடன் பள்ளி செல்ல தயாராகிய மாணவர்கள்!

தமிழகத்தை போலவே கர்நாடகத்திலும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.தற்போது பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் கட்டமாக 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இன்று 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! உற்சாத்துடன் பள்ளி செல்ல தயாராகிய மாணவர்கள்!

இந்நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகள் அக்.25 இன்று திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி இன்று திங்கட்கிழமை தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு! உற்சாத்துடன் பள்ளி செல்ல தயாராகிய மாணவர்கள்!

50 சதவீத குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், முதல் ஒரு வாரம் பள்ளிகளை அரை நாள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்புகளுக்கு குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தருகிறார்கள் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web