இன்று பதவியேற்பு... விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏ.பி.சிங் தேர்வு | ஏர்மார்ஷல் ஏ.பி.சிங் கடந்து வந்த பாதை!

 
ஏ.பி.சிங் விமானப்படை
இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று செப்டம்பர் 30ம் தேதி பதவியேற்கவுள்ளார். தற்போது விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷல் விவேக் ராம் செளத்ரி நாளை செப்டம்பர்  30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். 

இதனையடுத்து அந்தப் பதவிக்கு ஏ.பி. சிங் என்றழைக்கப்படும் அமர் பிரீத் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு பிப்ரவரி முதல் விமானப் படையின் துணைத்தளபதியாக இருக்கும் ஏ.பி. சிங், இன்று விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று இந்திய விமானப்படை தினம்!

1984ல் விமானப்படையில் இணைந்த ஏ.பி. சிங், தேசிய பாதுகாப்பு அகாடமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி, தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

விமானப்படை

மிக் - 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2019ம்  ஆண்டு அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023ம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web