இன்று அமாவாசை... தர்ப்பண நேரத்தில் இதைச் செய்ய மறக்காதீங்க!
ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு நம்மைப் பார்க்க கிளம்பி வருவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைகிறார்கள். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிகிறார்கள்.
பித்ருக்களுக்கு எவன் ஒருவன் தனது கடமையை மறக்காமல் செய்து வருகிறானோ அவனை மட்டுமல்லாமல், அவனது சந்ததியினரையும் தழைக்க செய்து வாழ வைக்கும். அமாவாசையன்று எதையெல்லாம் செய்ய கூடாது? எதை செய்ய வேண்டும் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க.
அமாவாசை திதியில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்பவர்கள், அன்றைய தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும்.
அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு, பித்ருக்கள் நல்லருள் வழங்குவதாக ஐதீகம். ஐப்பசி மாதத்தில் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கங்கை தேவி வாசம் செய்கிறாள். இந்த மாத அமாவாசை தினத்தில் திதி கொடுத்து, நீர் நிலைகளில் குளிப்பது நன்மை தரும். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.
தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு சாப்பிடலாம். இவற்றுடன் தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு. அதனால், அமாவாசை விரதம் இருப்பவர்கள் இதை எல்லாம் செய்ய மறக்காதீங்க. பித்ருக்களின் ஆசி என்றென்றுடன் உங்கள் குடும்பத்தைக் காக்கும்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!