இன்றே கடைசி... யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க உடனே போங்க!
மருத்துவத்துறையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 22ம் தேதி இன்று திங்கட்கிழமையுடன் முடிவடைய இருப்பதாக இந்திய மருத்துவம் -ஹோமியோபதி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புகளுக்கு சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள கல்லூரிகளில் 160 இடங்களும், 17 தனியார் கல்லூரிகளில் 80க்கும் மேற்பட்ட இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை இதனை விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று ஜூலை 22 வரை நீட்டிக்கப்பட்டது.இதனையடுத்து யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா