இன்று கடைசி தேதி... மறந்துடாதீங்க... மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறக்காம அப்ளை பண்ணுங்க. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பர எண். FTA01/2024
பணி: Welder
காலியிடங்கள்: 50
வயதுவரம்பு: 30 வரை
சம்பளம்: மாதம் ரூ.42,500
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ. 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎக்ஸ்எஸ் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
BHEL PSSR, BHEl Integrated Office Complex, TNEB Road, Pallikaranai, Chennai-600 100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.11.2024
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!