இன்று மகாளய அமாவாசை... தர்ப்பண நேரத்தில் இதை செய்ய மறக்காதீங்க!

 
அமாவாசை

இன்று மகாளய அமாவாசை தர்ப்பணம் தருகின்ற நேரத்துல இதைச் செய்ய மறக்காதீங்க. முன்னோர்களின் ஆசியைப் பரிபூரணமாக பெற்றிடுங்க. வருடத்தில் புரட்டாசி, ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் ரொம்பவே முக்கியமானவை.

ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில் அவர்கள் பூலோகம் வந்தடைகின்றனர். அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களை மகாளய பட்ச காலம் என்கிறோம். இந்த 14 நாட்களுமே அவர்கள் பூமியில் தங்கி இருந்து அருள் புரிவர்.

அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும்.

மகாளய அமாவாசை!! மறக்காதீங்க!!!பித்ருக்களை இப்படி வழிபட்டால் வாழ்வு சிறக்கும்!!
மகாளய அமாவாசையில் தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பித்ருக்கள் ஆசிர்வதிக்கிறார்கள். மகாளய அமாவாசை தர்ப்பணத்தை கூடிமானவரை நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுக்கலாம். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.

அமாவாசை அன்று மறந்தும்  இதை மட்டும் செய்யாதீங்க!

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு, சாப்பிடலாம். அத்துடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் சிறப்பான பலன்களை தரும். புரட்டாசி அமாவாசை தினமான இன்று அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web