இன்று தீபாவளி விடுமுறைக்கு மாற்று பணி நாள்... தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், மின்வாரியம், ரேஷன் அனைத்தும் முழு நாளும் இயங்கும்!

 
தமிழக அரசு தலைமை செயலகம்

இன்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள், மின்வாரியம் என அனைத்தும் மாலை வரை வழக்கம் போல் இயங்கும். கடந்த தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் இன்று முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

அதே போன்று இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இன்று முழு நாளும் அரசு அலுவலகங்களும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மின்சார அலுவலகங்கள் இன்று திறக்கப்பட்டிருக்கும். வழக்கமான வார வேலை நாட்களை போல் இன்றைய தினம் மின் கட்டணம் செலுத்தலாம். தமிழக மின் வாரிய அலுவலகங்களுக்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமைகள் எப்போதும் விடுமுறையாகும்.  நவ.1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் eb
 அதே போல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும். இந்த முகாம் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சென்னையில் இருக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web