ஷாக் கொடுத்த தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை அக்டோபர்  30ம் தேதி ஒரு சவரன் ரூ.59000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம்
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின்  விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில்  21ம் தேதி தங்கம் விலை 60000ஐ கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68000ஐ தொட்டது. கடந்த சில நாட்களாக  தங்கத்தின்  விலை ஏறி, இறங்கி வருகிறது.


அந்த வகையில், தங்கம் விலை 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 வரை சரிந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்  தங்கம் விலை நேற்று  கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8290க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கம் விலை நேற்று   2வது முறையாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.67,280-க்கும் விற்பனையானது.

தங்கம்
இந்நிலையில், தங்கம் விலை இன்று ஏப்ரல் 10ம் தேதி  ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.8,560க்கும், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ரூ.68,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ107000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web