வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம்.... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 தமிழகத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  செப்டம்பர் 13க்கு பிறகு தங்கத்தின் விலை 3 நாட்களில் அடுத்தடுத்து உயர்ந்து சவரன் ரூ.1,400 வரை உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 55 ஆயிரத்தை தாண்டியது.  அதே போல் 21ம் தேதி தங்கத்தின்  விலை கிடுகிடுவென உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6960க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம்

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ20 உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6980க்கும்,  சவரனுக்கு ரூ.160 உயர்ந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஜூலை 17ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.55,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   இது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிக பட்ச விலையாக இருந்து வந்தது.  இந்த விலையை இன்று தங்கம் விலை உயர்வு முறியடித்து, சவரன் ரூ.55,840 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

வெள்ளி, விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ98000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அமெரிக்க பெடரல் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து இருப்பதால்  சர்வதேச காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், இந்தியாவிலும்  நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து வரிசையாக பண்டிகைகள் தான். இதனாலும் தங்கத்தின் விலை உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.   

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web