தங்கம் அதிரடி சரிவு... இல்லத்தரசிகள் உற்சாகம்!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

 இந்தியாவில் நேற்று 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து  நேற்றே தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ 2100 வரை  குறைந்தது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு இன்றும் ரூ480 குறைந்துள்ளது.

தங்கம்

இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ60 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ6490க்கும், சவரனுக்கு ரூ480 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ51920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 92க்கும்,  ஒரு கிலோ வெள்ளி விலை ரூ92000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவை பொறுத்தவரை   ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது.  இந்த நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது.  இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.
தங்கம்

இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web