தாறுமாறாக சரிந்த தங்கம்... முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

 
தங்கம்

 சென்னையில் இன்று ஜூலை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ15 குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6810க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.54,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.95.60-க்கும்  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ95600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

இந்தியாவை பொறுத்தவரை அதிலும்  குறிப்பாக தமிழ்நாட்டில்  தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில்   குழந்தை பிறப்பது முதல் குடும்பத்தின் சுபநிகழ்வுகளுக்கு  தங்கம் வாங்குவது நமது வழக்கமாக இருந்து வருகிறது.   ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது.   
பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு  பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. அதே போல் அவசர மற்றும் ஆபத்து காலங்களில் அடகு வைக்கவும், உடனடி பணத் தேவைகளுக்கும் தங்க நகைகளே ஆபத்பாந்தவனாக இருந்து வருவதாக பெண்களின் நம்பிக்கை.  தங்க நகைகள் பயன்பாடும், தினசரி புழக்கத்தில்  இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் மீதான முதலீட்டை கணக்கில் கொண்டு வர மத்திய அரசு  தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இருந்தபோதிலும், தங்கம் நகையாக விற்பனையாவது குறையவே இல்லை என்கின்றனர் தங்கநகை வியாபாரிகள்.  உக்ரைன், ரஷ்யா போர், கொரோனா காலம், இஸ்ரேல் காசா போர் நிலையற்ற தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதாரச் சரிவிலிருந்து மீள நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே ஆதாரமாக இருப்பவை தங்க நகைகள் தான்.  கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது

தங்கம்

பெண்களுக்கு சொத்து சேர்க்கிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக தங்கத்தை சேர்த்துவிடுவார்கள் பெற்றோர். தன் வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு போகும் பெண்களுக்கு தங்கத்தைத்தான் சீதனமாக பெற்றோர்கள் போடுகிறார்கள். இன்றுவரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. பெண்கள் விரும்பி அணிவது தங்கத்தை தான். தற்போது ஆண்களுக்கும் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை அணியும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட முடியும். தங்கம் இருந்தால் தைரியமாக தொழில் தொடங்கலாம். வீடு கட்டலாம். தங்கத்தின் மீதான கடன் வட்டி மிகவும் குறைவு. எனவே மக்கள் தங்கத்தை முதலீடாகவும், வாழ்க்கையின் அங்கமாகும் பார்க்கிறார்கள்.

 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web