டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வெளியீடு... எப்படி பதிவிறக்கம் செய்வது? முழு தகவல்கள்!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்பொழுது ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் 215 தாலுகா தேர்வு நடைபெறும், சென்னையில் மட்டும் 2763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, சான்றிதழ்களில் திருத்தங்கள், சேதங்களை ஏற்படுத்துதல், போலியாக சமர்ப்பித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!