BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை சரிபார்க்க பிப்ரவரி 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை, ஆதார் ஓ.டி.பி., அல்லது ‘நெட்-பேங்கிங்’ அல்லது ‘டிமேட் உள்ளிட்ட கணக்கு வாயிலாக 120 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்தாண்டுக்கான வரி செலுத்துவோர் பலரும் இன்னும் சரிபார்க்கவில்லை. அதனால் 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை சரிபார்க்க பிப்ரவரி 28,2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள்து. அதற்குள் வருமான வரி கணக்கை சரிபார்க்காவிட்டால், அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கருதப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும். ஆனால் புதியதாக அரசு துவங்கியுள்ள வருமான வரி தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையாலும், கொரோனா தொற்று காரணமாகவும் டிசம்பர் 31-ம் தேதி வருமான வரி தாக்கல் நடைமுறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி வருமான வரி தாக்கல் செய்ய நாளையுடன் அவகாசம் நிறைவடைகிறது. அதனால் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 27-ம் தேதி வரை வருமான வரித் துறையின் இணையதளம் மூலம் ரூ. 4.67 கோடி அளவுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.