தூத்துக்குடி மொத்தமா மாறப் போகுது... 300 மில்லியன் டாலரில் ஜவுளி ஆலை... மாநகராட்சி ஆணையர் தகவல்!

 
தூத்துக்குடி ஜவுளி

தூத்துக்குடி மாவட்டம் மொத்தமா மாறப் போகுது. இந்த திட்டம் மட்டும் நடைமுறையில் வந்தால், தூத்துக்குடி மக்களின் பொருளாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி சிப்காட்டில் 300 மில்லியன் டாலரில் ஜவுளி ஆலை அமைப்பற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அகில இந்திய வர்த்தக தொழில்சங்க கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவிததார். 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் "தூத்துக்குடி நகர்புறம் மற்றம் பிராந்திய வளர்ச்சி” பற்றிய சிறப்புக் கூட்டம் சங்கத் துணைத் தலைவர் சிசில் மச்சாது தலைமையில், சங்கப் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

ஜவுளி உற்பத்தியாளர்கள்

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 2008-ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை மிகத் திறமையாக செயல்பட்டு வருகின்றது. தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி 2-வது மாநகராட்சியாக திறம்பட செயல்பட்டு விளங்குவதாக தமிழக அரசு அறிவித்து, தானும் மேயர் ஜெகன் அவர்களும் தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்றது மிகவும் பெருமைக்குரியதாகும் என்றார். 

தூத்துக்குடி நகராட்சியாக இருந்த பொழுது மொத்த பரப்பளவு 60 சதுர கிலோ மீட்டர் இருந்த நிலையில், தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளையும் சேர்த்து தற்பொழுது 90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக உள்ளது. முத்துநகர் கடற்கரை மிகப் பொலிவுடன் நீர் விளையாட்டு அமைத்திட முயற்சி நடந்து வருகிறது. துறைமுக துறைமுக கடற்கரையை பொழுது போக்கு அம்சங்களுடன் துறைமுக ஆணையம் "திட்டத்தின் விவரமான அறிக்கை” தயாரித்து ரூ.8 கோடி நிதி உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சி ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும். 

தூத்துக்குடி

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த படியாக ஈரோடு மற்றும் தூத்துக்குடி தொழில்வளம் மிக்க நகரமாக விளங்குவதாலும், ஈரோடு மாநகராட்சியானது வீடு, வணிக நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை விட தூத்துக்குடி மாநகராட்சி விதிக்கப்படும் சொத்து வரி மிகக்குறைவாக உள்ளது. 

தொழில்வளம் மிக்க மாநகரமாக திகழ்வதால் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்து இந்தோனேஷியாவில் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி கம்பெனி அமைத்திருப்பது போல், தூத்துக்குடி சிப்காட்டில் 300 மில்லியன் டாலரில் ஜவுளி ஆலை அமைப்பதற்கு அனுமதி பெறுவது பற்றி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறினார். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web