தூத்துக்குடி: ‘நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் நாய் கண்காட்சி... பார்வையாளர்கள் உற்சாகம்!
சென்னை, கோவையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் 18 வகையான நாய்களின் திறமைகளைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ந்தனர்.
தூத்துக்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பவத் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் லேபர் டாக் மின் பின் கோல்டன் ரெட்ரீவர் டாபர்மேன் ராட்வீலர் அமெரிக்கன் புள்ளி ராஜபாளையம் இகல் அமெரிக்கன் டாபர்மேன் ஜெர்மன் ஷெப்பர்ட் சிச்சு சுபா குவா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாய் வகைகள் மற்றும் பாரம்பரிய நாட்டு நாய் வகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த கண்காட்சியில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாய்களுடன் வந்த நாய்களின் உரிமையாளர்கள் கூறியதற்கு ஏற்ப நாய்கள் செயல்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது
இந்நிகழ்ச்சி சிதம்பரநகர் 3-வது தெருவில் இருந்து பிரையண்ட் நகர் 10-வது தெரு வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதை முன்னிட்டு சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதைமுன்னிட்டு நேற்று மதியம் முதல் பிரையண்ட்நகர் மெயின் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் பிரையண்ட்நகர் கிழக்கு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!