செப்டம்பர் 6ம் தேதி தடை! அரசு அதிரடி அறிவிப்பு!

 
செப்டம்பர் 6ம் தேதி தடை! அரசு அதிரடி அறிவிப்பு!

இம்மாதம் 6ம் தேதி திங்கட்கிழமை அமாவாசை அன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

செப்டம்பர் 6ம் தேதி தடை! அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 3ம் அலையின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்கிற எச்சரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மாநில அரசு, கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

செப்டம்பர் 6ம் தேதி தடை! அரசு அதிரடி அறிவிப்பு!

தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் திங்கட்கிழமை அமாவாசை விரதம் கடைப்பிடிக்கப்படுவதால், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று முதலே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிசாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

செப்டம்பர் 6ம் தேதி தடை! அரசு அதிரடி அறிவிப்பு!

வழக்கமாக அமாவாசை தினத்தில், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு கரையில் திதி கொடுப்பார்கள். இந்நிலையில், செப்டம்பர் 6ம் தேதி சர்வ அமாவாசை தினத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், பக்தர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

From around the web