‘புனித வெள்ளி’ அனுஷ்டிக்கப்படுவது இதனால் தான்!

 
‘புனித வெள்ளி’ அனுஷ்டிக்கப்படுவது இதனால் தான்!


இன்று புனித வெள்ளி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாளாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினமாக கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி. இந்த புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை புனித வெள்ளி .

‘புனித வெள்ளி’ அனுஷ்டிக்கப்படுவது இதனால் தான்!


தன்னை நேசிப்பவர்களுக்காக பாவங்களைச் சுமந்து தனது இன்னுயிரை ஈந்த இயேசு பிரானை மனதால் துதித்து, நமது பாவங்களைப் போக்கி, நற்கதி அடைய பிரார்த்தனைச் செய்து வாழ்வில் விடியலைக் கொண்டு வருவோம்.

‘புனித வெள்ளி’ அனுஷ்டிக்கப்படுவது இதனால் தான்!


உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு ‘பெரிய வெள்ளி’ என்றும், புனித வெள்ளி என்றும் சொல்லப்படுகிற தினம், அவர்களுக்கு துக்கம் அனுசரிக்க பட வேண்டிய நாள்.
இறைமகன் இயேசு கிறிஸ்து மானுட பிறவி எடுத்து மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே பலியாக தந்து, மரித்த நாளைத் தான் ‘புனித வெள்ளியாக’ கிறிஸ்தவ சகோதரர்கள் அனுசரிக்கின்றார்கள்.

‘புனித வெள்ளி’ அனுஷ்டிக்கப்படுவது இதனால் தான்!

இறைமகன் இயேசு கிறிஸ்து மானுட பிறவி எடுத்து மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னையே பலியாக தந்தார். அவர் மரித்த நாளே ‘புனித வெள்ளியாக’ அனுசரிக்கப்படுகிறது. தமக்காக ரத்தம் சிந்திய இயேசுவின் தியாகத்தை கருதி அதனை மக்கள் ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து துக்கம் கொண்டாடுகின்றனர்.


பெரிய வெள்ளி வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஏறக்குறைய நண்பகல் 3 மணியளவில் தொடங்கும். அதுவே இயேசு சிலுவையில் இறந்த நேரம் என்பதால் இவ்வாறு நடக்கிறது. குரு சிவப்பு உடை அணிந்திருப்பார். அவர் திருப்பணியாளர்களோடு கோவில் பீடத்திற்கு வந்து முகங்குப்புற விழுந்து அமைதியாக இறைவேண்டல் செய்வார். பின் விவிலியத்தின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பகுதிகளிலிருந்து வாசகப் பகுதிகள் அறிக்கையிடப்படும். இதனை தொடர்ந்து சிலுவை பாதை நடைபெறும். இயேசு இறந்த 3ம் நாள் மீண்டும் உயிர்தெழுந்தார் என்பர் அதுவே ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

dinamaalai.com

From around the web