புத்தக திருவிழாவில் விஜய்யுடன் கலந்து கொள்ள திருமா மறுப்பு!
டிசம்பர் 6ம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது.இதனை முன்னிட்டு அன்றைய தினம் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட விகடன் பதிப்பகம் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் (விசிக துணை பொதுச்செயலாளர்) நிறுவனம் இரண்டும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவன் கையால் அம்பேத்கர் புத்தகத்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஒரே மேடையில் இருவரும் கலந்து கொள்ளும் தகவல் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்களை வைத்து திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இருவரும் ஒரே மேடையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என அரசியல் வட்டாரத்தின் கண்கள் இந்த விழாவின் பக்கம் தான் இருந்தது.
இந்நிலையில் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடக்கத்தில் விஜய்யுடன் திருமாவளவன் பங்கேற்பார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய் வருகை தர இருப்பதால் தான் தற்போது அவர் மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நவம்பர் 9ம் தேதி திருமாவளவன் ”இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருப்பது விகடன் பதிப்பகம் தான். அதில் யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்தும் அறிவிப்பார்கள்” என அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!