புது வருஷம் 2025ல் தொடர் விடுமுறை நாட்கள் இவை தான்... இப்பவே நோட் பண்ணிக்கோங்க!

 
2025 விடுமுறை

இன்னும் முழுசா ஒரு மாசம் தான் இருக்கு. ஏறக்குறைய 2024 ம் ஆண்டின் கடைசிக்கட்ட பயணத்தில் இருக்கிறோம். விரைவில் 2024ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2025ம் ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அதன்படி விடுமுறை நாட்களைத் திட்டமிட இதுவே சரியான நேரம். குறிப்பாக தொடர்ந்து விடுமுறை தினங்களாக வரும் வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்கு  2025 ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.  இந்த ஆண்டில் 12 நீண்ட வார இறுதி நாட்கள் அமைந்துள்ளன.  2025ம் ஆண்டின் அனைத்து நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ,  

ஜனவரி 11 : 2வது சனிக்கிழமை  
ஜனவரி 12 :  ஞாயிற்றுக்கிழமை
ஜனவரி 13 : திங்கட்கிழமை போகிப்பண்டிகை
ஜனவரி 14 : செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை
ஜனவரி 15 : புதன்கிழமை திருவள்ளுவர் தினம்
 ஜனவரி 16 :  வியாழக்கிழமை காணும் பொங்கல்  

2026 தேர்தல் வேற வருது. அதனால எப்படியும் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஆட்சியாளர்கள் விடுமுறை அறிவிச்சுடுவாங்க. அதனால அதற்கடுத்து ஜனவரி 18 மற்றும் 19ம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என புதுவருஷமே கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை தினங்களாக துவங்குகிறது. 

பொங்கல்

அதே போல் மார்ச் மாதத்தில் 2 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் வருகின்றன.
மார்ச் 14 : வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை
மார்ச் 15 : 2வது சனிக்கிழமை  
மார்ச் 16 : ஞாயிற்றுக்கிழமை

2 வது நீண்ட வாரயிறுதி விடுமுறை
மார்ச் 29 : சனிக்கிழமை
மார்ச் 30 : ஞாயிற்றுக்கிழமை  
மார்ச் 31 : திங்கட்கிழமை – ஈகை திருநாள்

ஏப்ரல் :

ஏப்ரல் 10 -வியாழக்கிழமை - மஹாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை – ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம்.  
ஏப்ரல் 12  இரண்டாவது சனிக்கிழமை 
ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை - புனிதவெள்ளி

ஏப்ரல் 19 சனிக்கிழமை
ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை
 
மே  
மே 10 இரண்டாவது சனிக்கிழமை
மே 11 ஞாயிற்றுக்கிழமை
மே 12 திங்கட்கிழமை - புத்த பூர்ணிமா

ஆகஸ்ட்  
ஆகஸ்ட் 15 : வெள்ளிக்கிழமை –  சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 : சனிக்கிழமை ஜென்மாஷ்டமி
ஆகஸ்ட் 17 : ஞாயிற்றுக்கிழமை  

விடுமுறை

செப்டம்பர் 

செப்டம்பர் 5 வெள்ளிக்கிழமை ஓணம்
செப்டம்பர் 6 சனிக்கிழமை
செப்டம்பர் 7ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர்   
அக்டோபர் 1 : புதன்கிழமை – மஹாநவமி
அக்டோபர் 2 : வியாழக்கிழமை – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 3  : வெள்ளிக்கிழமை
அக்டோபர் 4 சனிக்கிழமை
அக்டோபர் 5 ஞாயிற்றுக்கிழமை
 
அக்டோபர் 18 : சனிக்கிழமை
அக்டோபர் 19 : ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 20 : திங்கட்கிழமை - தீபாவளி

டிசம்பர் 
டிசம்பர் 25 : வியாழக்கிழமை - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26 : வெள்ளிக்கிழமை
டிசம்பர் 27 : சனிக்கிழமை 
டிசம்பர் 28  : ஞாயிற்றுக்கிழமை

அதனால இந்த விடுமுறை தினங்களுக்கேற்ப உங்கள் ப யணங்களை திட்டமிட்டுக்கோங்க. சொந்த ஊருக்குப் போக நினைப்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு பண்ணிடுங்க. ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web