இந்த 6 ராசிக்காரங்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை... குரு யோகத்தால வாழ்க்கை செழிக்க போகுது... வாய்ப்புகளை தவற விடாதீங்க!

 
சூரியன் குரு
இந்த 6 ராசிக்காரர்கள் வருகின்ற வாய்ப்புகளைத் தவற விடாதீங்க. அதே சமயம் வெற்றிகளில் நிதானத்தைக் கடைப்பிடிங்க. எக்காரணம் கொண்டும், எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஜாமீன் கையெழுத்து மட்டும் யாருக்காகவும் போடவே போடாதீங்க.

துலாம்: 

பணவிஷயத்தில் எச்சரிக்கை அவசியம். ஜாமீன் கையெழுத்துக்கள், பஞ்சாயத்துக்களில் இருந்து விலகி இருப்பது உத்தமம். செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். சில மன உளைச்சல்கள் ஏற்படலாம், எனவே தியானம் மற்றும் யோகா போன்ற செயல்களின் மூலம் மன அமைதியைப் பெறலாம்.  

ஜோதிடம் ராசிபலன்

விருச்சிகம்: 

உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் உருவாகலாம். பழைய நிகழ்வுகளால் மன அழுத்தங்கள் ஏற்படலாம்.  திடீர் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணம், சொத்து விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். ஆரோக்கிய குறைபாடுகளால் விரயச் செலவும் ஏற்படலாம். இதனால் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

தனுசு: 

ஆரோக்கியம் மற்றும் பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். காரியத்தடை, காலதாமதத்தால் தொழிலில் நஷ்டம் உருவாகலாம். இதனால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அலுவலகத்தில் சகபணியாளர்களிடையே சலசலப்புகக்ள் இருந்தாலும்  காலப்போக்கில் சீராகும். பகையை வளர்க்க தேவையில்லை. பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்க காலம் இன்னும் கனியவில்லை.  

மகரம்: 

குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் மோதல்கள் உருவாகலாம். வியாழன் மந்தநிலையில் இருந்தாலும், குடும்பத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பொறுமையாக செயல்பட வேண்டும்.  நிதி விஷயங்களில் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள்.   திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் இதுவாக இருக்கும்.  

ஜோதிடம் ராசிபலன் குரு வியாழன்

கும்பம்: 

புதிய முயற்சிகளுக்கு சாதகமான காலகட்டம் இது. தொழிலில் மாற்றம் செய்ய விரும்பினால் வெற்றி அடையலாம்.  உறவுகளில் சச்சரவுகள், மனக்கசப்புக்கள் உருவாகலாம். இலக்குகளில் கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.தெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

மீனம்: 

தொழில் மற்றும் பணத்தில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் காலகட்டம் இது.  பணியிடத்தில்  நற்பெயர் அதிகரிக்கும், முயற்சிகள் பாராட்டப்படும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வாழ்க்கையில் திடீர் சவால்களை பொறுமையுடன் எதிர்கொண்டால் சாதகமான பலன்களை பெறலாம்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web