உடம்பில் ஒட்டு துணி இல்லை.. ஆபாச நடனமாட வற்புறுத்திய ஆசாமிகள்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

 
பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இளம் பெண் ஒருவரை ஆடைகளை அவிழ்த்து, பாலியல் பலாத்காரம் செய்து நடனமாட வைத்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம்

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து 19 நாட்களாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பெண் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ​​90 நாட்களுக்குள் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

போலீஸ்

தன்னை நிர்வாணமாக்கி பெல்ட்டால் அடித்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தொலைக்காட்சியில் பாடல்களை வைத்து அரை மணி நேரத்திற்கும் மேலாக நிர்வாணமாக நடனமாடச் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மாறான கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web