அமைச்சரின் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி.. புதுப்பெண் கவலைக்கிடம்... கதறும் உறவினர்கள்!
சென்னை பாண்டிச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகளும் குறைவில்லாமல் நிகழும் சோகம் நீடிக்கிறது.
இந்நிலையில், அமைச்சர் ஒருவரின் கார் மோதி புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து, மயிலாடுதுறை நோக்கி அமைச்சர் மெய்ய நாதனின் கார் சென்றது.
அந்த கார் வேகமாக சென்ற போது, எதிரே வந்த பைக் மீது மோதி மோதியது. இதில், பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அந்த பைக்கில் பயணம் செய்த இளைஞர் உயிரிழந்த நிலையில், இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுமண தம்பதியினர் பைக்கில் கார் மோதியது தெரியவந்தது. இதில் கணவன் ஜான்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி ரூத் பொன் செல்வி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்ற அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வர சென்னையில் இருந்து அவரது கார் சென்றது தெரிய வந்தது. புதுமண தம்பதிகள், கடலூரில் உள்ள தங்களது வீட்டிலிருந்து சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் குடிச்சு செத்தவங்க குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை தர்றாங்களே... அமைச்சரோட கார்ல அடிப்பட்டு செத்தவனுடைய குடும்பத்துக்கு என்ன இழப்பீடு தருவாங்க... அட.. மனிதாபிமான அடிப்படையில் அவனோட வீட்டிற்காவது அமைச்சர் போய் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டாமா? கேட்டா நீங்க திமுகவுக்கா ஓட்டு போட்டீங்கன்னு கேட்பாங்க போல? என்று கதறுகிறார்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள். அமைச்சர் என்ன செய்யப் போகிறார்? மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் புதுப்பெண்ணைப் பற்றிக் கூட யாரும் கவலைப்படலை என்று புலம்புகிறார்கள் உறவினர்கள்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!